Vijay Sethupathi: ஏராளமான நடிகர்கள் தற்பொழுது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் மிகவும் குறைவாகவே சம்பளம் வாங்கியவர்கள் பலர் உள்ளனர். அப்படி ஜெயம் ரவி படத்தில் நடிப்பதற்காக 400 ரூபாய் சம்பளம் கொடுத்ததாக விஜய் சேதுபதி சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய பிரபலமானவர்தான் ஜெயம் ரவி. முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை தந்தது. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றினை கண்ட ஜெயம் ரவி தொடர்ந்த அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தற்பொழுது சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார்.
ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இறைவன் திரைப்படத்தினை அகமது இயக்கியுள்ளார் இந்த படம் வருகின்ற 28ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதனால் படக் குழுவினர்கள் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி நேற்று இறைவன் படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது.
இதில் ஜெயம் ரவி உள்ளிட்ட படக் குழுவினர்கள் கலந்துக் கொள்ள சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி உட்பட சிலரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசிய பொழுது இறைவன் படத்தின் தலைப்பு தனக்கு பிடித்திருப்பதாகவும் அடுத்த படத்தின் தலைப்பு ஜனகணமன அதைவிட நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நான் முதலில் நடித்த படத்திற்கு 250 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள் என்றும் ஜெயம் ரவி படத்தின் எம்.குமரன் படத்தில் நான் ஒரே ஒரு காட்சியின் நடித்திருந்தேன் அந்த காட்சிக்காக எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும் கூறினார். மேலும் நான் பார்த்து ரசித்த முதல் ஹீரோ ஜெயம் ரவி தான் என தெரிவித்தார்.
மேலும் ஜெயம் ரவி பேசுகையில், நான் ஒருவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நினைத்த ஹீரோ விஜய் சேதுபதி தான் என்றும் உங்களை வைத்து ஒரே ஒரு படமாவது நிச்சயம் ஏற்க வேண்டும் என்பது எனது ஆசை எனவும் மேலும் அன்பு பல பேருக்கு கிடைக்க வாய்ப்பில்லை இறைவன் என்றாலே அன்புதான் 100 பேருக்கு சோறு போட்டு பாருங்கள் சிறிய உதவி செய்து பாருங்கள் உங்களுக்கு இறைவன் தெரிவார் அப்படி ஒரு படம் தான் இறைவன் என ஜெயம் ரவி கூறியுள்ளார்.