தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோவாக பிரபலமடைந்த பிறகு அதே பாதையில் தான் பயணிக்க ஆசைப்படுவார்கள். ஏனெனில் அப்பொழுது தான் அவர்களது மார்க்கெட் குறையாமல் இருக்கும் அப்படி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்தால் தனது மார்க்கெட் குறைந்து விடும் என்ற எண்ணத்தில் ஹீரோவாக வாய்ப்பு வரும் படத்தில் மட்டுமே கமிட்டாகி நடிப்பார்கள்.
ஆனால் இதற்கு மாறாக சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சிறப்பான கதைகளம் அமையும் பட்சத்தில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்து அசத்துகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி வெற்றி கண்டவர் விஜய் சேதுபதி தற்போது விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக மிரட்டி வருவதால் அவர் ஹீரோவாக நடித்து வரும்..
படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன. நடிகர் விஜய் சேதுபதி விஜய் உடன் மாஸ்டர், கமலுடன் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். இதனால் தற்போது பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விஜய் சேதுபதியை வில்லனாக கமிட் செய்ய காத்து கிடக்கின்றனர்.
மேலும் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பிரபலம் அடைந்த எஸ் ஜே சூர்யாவும் அண்மைக்காலமாக வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். இதனால் தெலுங்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விஜய் சேதுபதி மற்றும் எஸ் ஜே சூர்யாவை படங்களில் கமிட் செய்ய ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் இவர்கள் இருவரையும் அணுகும் தயாரிப்பாளர்கள் தெரிந்து ஓடுகின்றனர்களாம்.
ஏனென்றால் சினிமா உலகில் இருக்கும் இவர்களது வரவேற்பை பார்த்து இருவரும் சம்பளத்தை உயர்த்தி உள்ளார்களாம். அப்படி விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு 16 கோடி சம்பளமாக கேட்கிறாராம் மேலும் எஸ்ஜே சூர்யாவும் ஒரு படத்திற்கு 8 கோடி சம்பளம் கேட்கிறாராம்.. இதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் தமிழ் நடிகர்களே வேண்டாம் என்ற முடிவிற்கு வந்து விட்டனராம்.