நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளார் சினிமா உலகில் ஹீரோவாக நடிப்பவர்கள் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பார்கள் வில்லனாக நடிப்பவர்கள் வில்லனாக மட்டுமே நடிப்பார்கள் அந்த இமேஜை உடைத்து எறிந்தவர் விஜய் சேதுபதி.
இவர் சினிமா உலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் கெஸ்ட் ரோல் என எதுவாக இருந்தாலும் தனது திறமையை காட்டி நடிப்பதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இவர் கடைசியாக வில்லனாக நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள்தான் மாஸ்டர் விக்ரம் போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது பல்வேறு புதிய படங்களில் வில்லனாக நடிக்கவும் ஒப்பந்தமாக உள்ளார் குறிப்பாக பாலிவுட்டில் மட்டுமே நான்கு ஐந்து படங்களில் கமிட் ஆகி இருப்பதாக சொல்லப்படுகிறது. முதலாவதாக நடிகர் விஜய் சேதுபதி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ஒரு தொகையை சம்பளமாக படகுழு நிர்ணயித்தது ஆனால் அதைவிட 5 கோடி எக்ஸ்ட்ரா விஜய் சேதுபதி கேட்டார் இதனால் படகுழு சிறிது நேரம் யோசித்து பின் தருவதாக கூறியது. ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்த விஜய் சேதுபதி சுமார் 30 கோடி சம்பளம் வாங்க உள்ளாராம்.
இந்த படத்திற்காக மட்டும் அவர் முப்பது கோடி வாங்கவில்லை அடுத்தடுத்த பாலிவுட்டில் நடிக்க போகும் படங்களுக்கும் இதே அளவில் தான் சம்பளம் வாங்கப் போவதாக ஒரு பக்கம் செய்திகள் உலா வருகின்றன. ஆனால் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அப்படி ஒரு தொகையை வாங்க போவது கிடையாது இவர் தமிழில் ஹீரோ, வில்லன் என எப்படி நடித்தாலும் அவருக்கு 15 கோடி தான் சம்பளம் என சொல்லப்படுகிறது.