படப்பிடிப்பில் அசிங்க அசிங்கமாக திட்டிய விஜய்சேதுபதி.! தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை பளீர் பேட்டி.! வைரலாகும் வீடியோ

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஒரு வருடத்திற்கு அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வெளியிடுகிறார். சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்தாலும் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்து விட்டார்.

இவர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு ஒரு சில படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார் முதன்முதலாக 2010ஆம் ஆண்டு வெளியாகிய தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகியது இந்த திரைப்படத்தில் சிருஷ்டி டாங்கே தமன்னா ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

jeeva subramaniyam
jeeva subramaniyam

படத்தை சீனு ராமசாமி அவர்கள் தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் திருநங்கையாக நடித்தது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர்தான் ஜீவா சுப்பிரமணியம் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளராக நடித்திருப்பார் திருநங்கை. அதுமட்டுமில்லாமல் இவர்  ரஜினி நடிப்பில் வெளியாகிய தர்பார் திரைப்படத்திலும் ஒரு காட்சியில் தோன்றி மறைவார்.

திருநங்கை சினிமா வாய்ப்புக்காக பல கம்பெனிகளில் ஏறி ஏறி இறங்கி உள்ளார் ஆனால் அங்கு பலரும் நீ என்ன நயன்தாராவா பெரிய ஸ்டார் என நினைப்பா என பயங்கரமாக கேலியாகப் பேசியுள்ளார் இப்படி ஒரு நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் தர்மதுரை திரைப்படத்தின் பொழுது தனக்காக கோபப்பட்ட விஜய் சேதுபதி குறித்து பேசியுள்ளார் தர்மதுரை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு சிலர் தப்பான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார்கள்.

அப்பொழுது விஜய்சேதுபதி அவர்களை விட மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார் அதன்பிறகு திருநங்கையை என் தங்கச்சி என கூறினார் இதனை அந்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் திருநங்கை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.