விஜய் சேதுபதி, சரத்குமார் போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடி அஜித் குமார் தான்.. என உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்.!

ajith-1

நடிகர் அஜித் குறித்து பிரபல இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறி இருக்கும் தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு அஜித் வளர்வதற்கு முக்கிய காரணம் இவருடைய விடாமுயற்சி தான்.

சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது யாரும் தொட முடியாத அளவிற்கு சினிமாவில் வளர்ந்துள்ளார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பற்றி நிலையில் இதனை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல நடிகரும், இயக்குனருமான கே.எஸ் ரவிக்குமார் அஜித் குறித்த தகவலை பகிர்ந்து உள்ளார். மேலும் சரத்குமார், விஜய் சேதுபதி போன்றவர்களுக்கெல்லாம் அஜித் தான் முன்னோடி எனவும் கூறியுள்ளார். அதாவது கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வரலாறு.

இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற நிலையில் பல கோடி வசூல் செய்து சாதனையை படைத்தது. அஜித்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் எனக் கூறலாம் இந்த படத்தில் நடிகர் அஜித்தை தொடர்ந்து கனிகா, மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ajith
ajith

மேலும் அஜித் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருந்தார் அந்த வகையில் கண் மை, லிப்ஸ்டிக், கையில் மருதாணி, நகைகள் அணிந்து கொண்டு பாதி பெண் போலவும், மீதி ஆண் போலவும் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்தால் தன்னை கேலி செய்வார்களா என‌அஜித் கே.எஸ் ரவி குமாரிடம் கேட்க அப்படியெல்லாம் எதுவும் ஆகாது என கூறினாராம். இவ்வாறு அப்பொழுதே நடிகர் அஜித் இப்படி ஒரு கெட்ட போட்டு இருந்த நிலையில் அதன் பிறகு தான் காஞ்சனா படத்தில் சரத்குமார், டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி எல்லாம் இப்படி ஒரு கேரக்டரில் நடித்ததாகவும் இவர்களுக்கெல்லாம் அஜித்தான் முன்னோடி எனவும் கூறியுள்ளார்.