அரண்மனை 4 – ல் நடிக்க ஓகே சொன்ன விஜய்சேதுபதி.. கேட்ட சம்பளம் தான் அதிகம்.?

vijay-sethupathy
vijay-sethupathy

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. ஆரம்பத்தில் ஆக்சன் காமெடி படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருந்த இவர் திடீரென தனது ரூட்டில் இருந்து மாறி கடந்த சில வருடங்களாக இயக்குனர் சுந்தர். சி பேய் கதைகள் நடிப்பது மற்றும் இயக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதுவும் அவருக்கு ஒர்க் அவுட்டாகி தான் வருகிறது குறிப்பாக அவர் இயக்கி நடித்து வரும் அரண்மனை மூன்று பாகங்களுமே மிகப்பெரிய வெற்றி தான். இந்த மூன்று பாகங்களை தொடர்ந்து அடுத்த பாகத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள்  பெரிய அளவில் எதிர்பார்த்தனர் ஆனால் சிறு கேப் விட்டு தற்பொழுது மீண்டும் அதற்கான வேலைகளில் சுந்தர் சி இறங்கி உள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி அரண்மனை நான்காம் பாகத்தின் கதையை நடிகர் விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே சொல்லி ஓகே வாங்கி இருந்தார் இந்த நிலையில் அரண்மனை 4 குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது இயக்குனர் சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ வெளியாகிறது.

அதில் சுந்தர்சியுடன் சந்தானம் மற்றும் விஜய் சேதுபதி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் இதனால் அரண்மனை 4 உறுதி செய்யப்பட்டது தற்பொழுது அரண்மனை நான்காம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் கேட்டுள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்க போகிறார் என சினிமா வட்டாரங்கள் பக்கத்தில் இருந்து தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் இது குறித்து இன்னும் உறுதியான தகவல் பட குழு சைடுல இருந்து வெளிவரவில்லை என்பதுதான் உண்மை.