Vijay Sethupathi reveals secret about Rajini and Vijay information viral:மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது ஒரு சில திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகிறது.
அந்தவகையில் இவர் ரஜினி திரைப்படமான பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருப்பார்.அதுமட்டுமல்லாமல் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரஜினி மற்றும் விஜய் பற்றி ஒரு தகவல்களை கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.
அந்த தகவல் என்னவென்றால் ரஜினியுடன் சேர்ந்து நடித்தபோது அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார்.
அதேபோல்தான் விஜயும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் எந்த கதாபாத்திரத்தில் நடிப்போம் அந்த கதாபாத்திரத்தை மட்டுமே நினைத்து சிந்தித்துக் கொண்டிருப்பார்.
இவர்கள் 2 பேரும் வெற்றியின் ரகசியம் இது தான் என்று கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.