‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.. மாஸாக இருக்கும் ஷாருக் கான்

jawan
jawan

Jawan Movie: ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் போஸ்டர்களை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரைவுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ தொடர்ந்து தமிழில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி திரைப்படங்களை தந்த நிலையில் தற்பொழுது பாலிவுட்டில் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அப்படி மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார்.

ஜவான் படத்தின் ஹீரோவாக ஷாருக் கான் நடிக்க இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஜவான் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜவான் படத்தில் யோகி பாபு, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்திய படமாக உருவாகும் ஜவான் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு மங்காத்தா கெட்டபில் நடித்திருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது அதன்படி மொட்டை தலையுடன் ஷாருக்கான் இருக்கும் இந்த போஸ்டரை விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் பகிர லைக்குகள் குவிந்து வருகிறது.