தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமா உலகில் இதுவரை பல்வேறு விதமான படங்களை இயக்கியுள்ளார் இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி படங்கள்தான் இதனால் வெற்றிமாறனின் சினிமா மார்க்கெட் அதிகரித்துள்ளது. மேலும் வெற்றி மாறனுடன் பணிபுரிய தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் ஆசைப்படுகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் பல்வேறு நடிகர்களை வைத்து படம் பண்ணுவதற்கு முன்பாக சூரி மற்றும் விஜய் சேதுபதி உடன் கைகோர்த்து அவர் எடுத்து வரும் திரைப்படம் தான் விடுதலை.இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார். அதில் முதல் பாகம் தற்போது விறுவிறுப்பாக காடு மற்றும் மலை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்திற்காக நடிகர் சூரி உடம்பை செம ஃபிட்டாக வைத்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதேபோல விஜய் சேதுபதியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒப்பந்தமாகி ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.
அந்த வகையில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் அது தவிர ஹிந்தியில் இரண்டு மூன்று படங்களிலும் தமிழில் பல்வேறு புதிய படங்களிலும் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார் ஆனால் நீண்ட காலமாக விடுதலை படத்தில் நடித்து வருகிறார்.
அது இதுவரை முடிந்தபாடு இல்லாமல் இழுத்துக் கொண்டே போகிறது. இதனால் விஜய் சேதுபதி தற்போது ஒரு முடிவை எடுத்து உள்ளார் அதாவது விடுதலை படத்திற்கு 30 நாள் இல்ல இன்னும் பத்து நாட்கள் சேர்த்து கால் ஷீட் தருகிறேன் இந்த படத்தை முடித்து விடுங்கள் என வெற்றிமாறனுடன் கேட்டுக் கொண்டுள்ளாராம்.