புதிய படத்தில் நடிக்க உடல் எடையை குறைத்த “விஜய் சேதுபதி”..! செம்ம ஸ்மார்ட்டாக இருக்கும் புகைப்படம்.

VIJAY SETHUPATHY

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து என்ட்ரி கொடுத்தார் அதை தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், சேதுபதி, தர்மதுரை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வந்தார் ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி..

ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் ரோல் போன்ற முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார். தற்போது விஜய் சேதுபதியை தேடி தமிழைத் தவிர மற்ற மொழி பட வாய்ப்புகளும் அதிகம் குவிந்து கொண்டே இருக்கிறது.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து கமலின் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் ரோலில் மிரட்டி இருப்பார் அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் விஜய் சேதுபதியின் டி எஸ் பி திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று ஓடியது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் படம் மக்கள் எதிர்பார்த்தபடி இல்லாததால் மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது விஜய் சேதுபதி கையில் ஜவான், காந்தி டாக்ஸ், விடுதலை போன்ற படங்கள் இருக்கின்றன இது போக இன்னும் சில திரைப்படங்களில் நடிக்க ரெடியாக இருக்கின்றார்.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்மார்ட் ஆன லுக்கில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்ட்களையும் பெற்று வருகின்றன இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்..

VIJAY SETHUPATHY
VIJAY SETHUPATHY