Vijay Sethupathi : திரை உலகில் நீண்ட தூரம் பயணிக்க நடிகர் நடிகைகள் ஃபிட்டாக இருக்க வேண்டியது ரொம்ப அவசியம் மேலும் படத்தின் கதைக்காகவும் ஒரு சிலர் உடம்பை ஏற்றி இறக்கியும் நடிதாக வேண்டியது காலத்தின் கட்டாயம். நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் வெற்றியை..
தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் கதைக்காக சுமார் 10 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். அவருடைய புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது. அஜிதை போலவே நடிகர் விஜய் சேதுபதியும் தற்பொழுது அதிரடியாக 12 கிலோ..
உடல் எடையை குறைத்து மீண்டும் இளமையான தோற்றத்தில் மிரட்டுகிறார். விஜய் சேதுபதி சமீபகாலமாக ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக தான் மிரட்டி வருகிறார் அதிலும் தமிழை தாண்டி பாலிவுடிலும் ஏகப்பட்ட வரவேற்பு ஜவான் படத்தைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் மற்றும் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் மிஸ்கினுடன் விஜய் சேதுபதி கைகோர்த்து உள்ளார்.
அதற்கான பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தை எஸ் கலைப்புலி தானு தயாரிக்க உள்ளார் இந்த படத்தின் கதை என்னவென்றால் விஜய் சேதுபதி பயணிக்கும் ரயில் வண்டியில் ஒரு பாம் வெடி இருக்கிறது இதை விஜய் சேதுபதி தேடி கண்டுபிடித்து வெடிக்க விடாமல் தடுப்பது தான் கதை..
மனுஷன் இல்ல தெய்வம் என் வீட்டுல கூட விஜயகாந்த் போட்டோ இருக்கும் – கண்கலங்கிய பிரபல நடிகர்
இதை வைத்து பார்க்கும் பொழுதே தெரிகிறது இந்த படம் நிச்சயம் ஆக்சன் மற்றும் எமோஷனல் காமெடி என அனைத்தும் கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதோ 12 கிலோ உடல் எடையை குறைத்து செம்ம ஸ்மார்ட் ஆக இருக்கும் விஜய் சேதுபதியை நீங்களே பாருங்கள்.