சமீபத்தில் தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்களும் தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி வருகிறார்கள் அந்த வகையில் டாக்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுத்ததன் காரணமாக தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி விட்டார்.
அதேபோல வெகுநாளாக முடங்கி இருந்த நடிகர் சிம்புவும் மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை அவரும் கணிசமாக உயர்த்தி உள்ளாராம் பொதுவாக ஒரு திரைப்படம் ஹிட்டுக்கொடுத்து விட்டாலே போதும் நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக வலம் வரும் நடிகர் ஆவார் இவர் வருடத்திற்கு ஒரு திரைப்படம் இல்லாமல் பத்து திரைப்படத்திற்கு மேலாக நடித்து வருகிறார்
மேலும் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியை வெப் தொடர் ஒன்றில் நடிக்க வைக்க ஓடிடி தளம் ஒன்று அணுகி உள்ளது. தற்போது வெப் தொடர் திரைப்படங்களை போலவே மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
மேலும் இதற்கான கதையை விஜய் சேதுபதி கேட்டவுடன் மிகவும் பிடித்துப் போய் விட்டதாம் ஆகையால் இந்த தொடரில் நடிப்பதற்கு விஜய்சேதுபதி முழு சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் இந்த தொடரில் நடிக்க தன்னுடைய சம்பளத்தை 30 கோடி கேட்டுள்ளாராம்.
இவ்வாறு விஜய்சேதுபதி பேசி இதன் காரணமாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகிய இருவரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளார்கள். பொதுவாக விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு 12 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் இந்நிலையில் 30 நாட்கள் கால்ஷீட் திற்காக இந்த அளவு சம்பளம் கேட்டது மிகவும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.