நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக ஜொலித்து வருகிறார் இவர் சினிமா உலகில் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லனாகவும் குணச்சித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்துவதால் இவரது மார்கெட் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது மேலும் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன குறிப்பாக வில்லனாக இவருக்கு வாய்ப்புகள் ஏராளம்.
தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிக்கின்றன. குறிப்பாக ஹிந்தியில் மூன்று, நான்கு படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக கமலின் விக்ரம் திரைப்படத்தில் நடித்தார். அதுவும் வில்லனாக சந்தானம் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்..
கமலும், விஜய் சேதுபதியும் மோதிக்கொள்ளும் காட்சிகள் வேற லெவலில் இருந்தது இந்த படம் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து புஷ்பா 2, ஜவான் மற்றும் பெயிரிடப்படாத பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி படத்தில் நடிக்கிறார் என பேசப்பட்டது ஆனால் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 விஜய் சேதுபதி நடிக்கவில்லை என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ஜவான் படத்தில் நடிக்கிறாரா.. இல்லையா.. என்பது ரசிகர்களுக்கு ஒரே கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதியை பார்த்து நீங்கள் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டுள்ளனர் அதற்கு விஜய் சேதுபதி ஆம் அந்த படத்தில் நடிப்பதாக சொல்லி அதை உறுதிப்படுத்தி உள்ளார்.
இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு ஃபைரலாகி வருகிறது. இதை அறிந்த ரசிகர்களும் தற்போது செம குஷியில் இருக்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதி ஜவான் தெரியப்படுத்த சுமார் 30 கோடி சம்பளம் வாங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.