நடிகர் விஜய் சேதுபதி பிரபல நடிகர் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரை உலகில் மிகக் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகராக உருமாறியவர் நடிகர் விஜய்சேதுபதி இவர் ஒரு வருடத்திற்கு அரை டஜன் திரைப்படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுவிட்டார்.
அதேபோல் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்து விட்டார். எதார்த்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் பல நடிகர்கள் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என இருப்பார்கள் ஆனால் விஜய் சேதுபதி அப்படி கிடையாது எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று முழுமனதுடன் நடிப்பார்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார். மாஸ்டர் திரை படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் என்ன மனுஷன்யா இவரு இப்படி நடிக்கிறார் என மிரண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதி கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள்தான் இயக்கியுள்ளார். மேலும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் இந்த திரைப்படத்தில் பகத் பாசில் நடித்துள்ளார்.
நாளை உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. கமலின் விக்ரம் திரைப்படத்தில் அசத்தலான மிரட்டலான விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு பூஜா ஹெக்டே நடித்துவரும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது மேலும் விக்ரம் திரைப்படத்தை விட விஜய் சேதுபதிக்கு மகேஷ்பாபுவும் திரைப்படத்தில் அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் முதலில் ஏதோ பெரிய நடிகருக்கு வில்லனாக நடிக்கிறார்கள் என்று பார்த்தால் அதையே தொழிலாக மாற்றி விட்டீர்களா ஏன் இப்படி செய்கிறீர்கள் என ரசிகர்களை கவலைப்பட வைக்கிறீர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.