நடிப்புக்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ஏறி உள்ளது மேலும் இந்த படத்தில் பல ஜாம்பவான்கள் நடிக்கின்றனர்.
ஆம் உலக நாயகன் கமலஹாசனுடன் கைகோர்த்து விஜய்சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, ஷிவானி நாராயணன், நரேன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் இந்த படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் கிளான்ஸ் வீடியோ போன்றவை வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது அதைத் தொடர்ந்து இந்த படத்தில் இருந்து அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இந்த படம் அடுத்த வருடம் கோடை நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்த நிலையில் மீதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக எடுத்து வருகிறது விக்ரம் படக்குழு இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் விக்ரம் படத்தில் இருந்து ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது நடிகர் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இவரது கேங்கில் பல நடிகர்கள் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன விஜய் சேதுபதி கேங்கில் வினோத், டெல்லி கணேஷ் மகன் மகாதேவன், மானாட மயிலாட கோகுல், சம்பத்ராம் போன்ற பலர் நடித்துள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்திலும் வைரலாகி வருகிறது.