சூரி முதன்முறையாக விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் இரண்டாவது பாகத்தில் சூரி ஹீரோ கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருப்பவர் தான் நடிகர் சூரி. மேலும் இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்க இருக்கும் திரைப்படத்திலும் சூரி ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. சூரி ஹீரோவாக நடித்திருக்கும் விடுதலை திரைப்படத்தினை வெற்றிமாறன் இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
அதில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் சூரி ஹீரோ கிடையாதாம். ஏனென்றால் முதல் பாகம் மிகவும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதனால் தான் சூரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்களாம்.
அதாவது தயாரிப்பாளர் வெறும் நான்கு கோடி மட்டுமே படத்திற்காக ஒதுக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்காக 10 கோடி சம்பளம் வாங்கியதால் அனைத்து பிளானும் தலைகீழாக மாறி உள்ளது. இதன் காரணத்தினால் தான் இந்த படத்தின் பட்சக்கட்டும் உயர்ந்து பிறகு இரண்டு பாகங்களாக எடுக்கும் நிலைமை சென்றுள்ளது.
இவ்வாறு சம்பளத்திற்கு ஏற்றார் போல் வெற்றிமாறனும் விஜய் சேதுபதியை வைத்து தன்னால் முடிந்த அளவிற்கு நன்றாக நடிக்க வைத்து வேலையை வாங்கி உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக சூரி இருந்தாலும் விஜய் சேதுபதிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் தான் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு தான் அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும் எனவே கண்டிப்பாக இந்த படம் நல்ல வரவேற்பினை பெரும் எனவும் படக் குழுவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். இவ்வாறு வெற்றிமாறன் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தால் மட்டுமே வசூல் வாரிக் குவியும் என வியாபார யுக்தியை சரியாக பயன்படுத்தியுள்ளார்.