பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்க வேண்டியது விஜய் சேதுபதி தான்.? 18 வருடம் கழித்து வெளியான ரகசியம்.

vijay-sethupathi
vijay-sethupathi

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப் பட்டு வரும் இயக்குனர் தான் ஷங்கர் இவர் தமிழ் திரையுலகில் இவரது கைவண்ணத்தில் நிறைய திரைப்படங்கள் வெளியாகி இவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது அந்த வகையில் பார்த்தால் இவரது கைவண்ணத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாய்ஸ்.

இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை என்றாலும் இவருக்கு ஒரு கலவையான விமர்சனத்தை தந்து விட்டது என்று தான் கூறவேண்டும் ஷங்கர் இந்த திரைப்படத்தின் கதையை நன்றாக எழுதினாலும் இந்த திரைப்படம் எடுத்த விதம் சரியில்லை என பல சினிமா பிரபலங்களும் கூறி வந்தார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் சித்தார்த்,பரத்,நகுள்,மணிகண்டன் என ஐந்து இளைஞர்கள் காதல் எப்படி செய்ய தவிக்கிறார்கள் என்பது பற்றிதான் இந்த திரைப்படத்தின் முழு கதை எனவும் கூறப்பட்டது மேலும் இந்த திரைப்படம் வெளியானபோது ஷங்கருக்கு பல பிரச்சனைகள் வந்ததையும் தாண்டி இவருக்கு ஒரு கெட்ட பெயர் எடுத்தது போல் ஆகிவிட்டதாம்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது ஆம் இதனை இவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளாராம் அதாவது விஜய் சேதுபதி பாய்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது புகைப்படத்தையும் அனுப்பி வைத்தாராம்.அதுமட்டுமல்லாமல் பாய்ஸ் திரைப்படத்தில் ஐந்து நடிகர்களில் ஒருவராக நடித்த மணிகண்டன் விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்.

vijay sethupathi
vijay sethupathi

நடிக்க இருந்ததாகவும் அந்த பட வாய்ப்பை இவர் மிஸ்  செய்ததால் இவருக்கு பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது என இவர் தனது சினிமா வாழ்க்கையில் நடந்த ஒரு சில விஷயங்களை கூறி வருகிறாராம். மேலும் இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.