மாஸ்டர் படத்தின் வெற்றியால் தலை கால் புரியாமல் ஆடும் விஜய்சேதுபதி.. சூழ்நிலை தெரிந்து அடுத்த படத்திற்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாரே..

கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் நல்லதொரு வெற்றியை பெற்றது அதன் பிறகு ஓரிரு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி தோல்வி பெற்றிருந்தாலும் தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் மீண்டும் அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தியேட்டர்கள் 50% இருக்கையுடன் பணியாற்ற வேண்டும் என கூறியது.

இதனையடுத்து தற்போது திரைப்படங்களில் மக்களின் கூட்டம் குறைக்க தொடங்கியுள்ளது. அரசு 50 % அனுமதித்தாலும் புதிய படம் திரையங்குகளில் மக்கள் கூட்டம் வருமா என்பது கேள்வி கூறி தான்.

இதனை முன்னிட்டு ஒரு சில படங்களில் பின்வாங்கி காத்து கொண்டு இருகின்றன  இந்த சுழலில் நடிகர் தனது அடுத்த படத்தை வெளியிட தேதியை குறிப்பிட்டுள்ளார்.  விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் தனக்கு கிடைத்த நல்ல வரவேற்ப்பை பார்த்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் தற்போதும் இருக்கிறார்கள் எனக் கூறி தனது அடுத்த படமான “லாபம்” திரைப்படத்தை வருகின்ற ரம்ஜான் நாள் அன்று வெளியிட ஆயத்தமாகி உள்ளார்.

ஆனால் 50 பர்சன்டேஜ் இருக்கைகளே இருப்பதால் மக்கள் வரவேற்பு கம்மியாக இருக்கும் அதோடு மட்டுமல்லாமல் இதற்கான லாபமும் கம்மியாகும் என ஒரு சிலர் கூறி வந்தாலும் விஜய் சேதுபதியு ஒரு முடிவோடு இருக்கிறார்.

எல்லாம் மாஸ்டர் திரைப்படமே காரணம் என கோலிவுட் வாசிகள் கூறுகின்றனர் மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்த வெற்றியை உடனே ருசிக்க விஜய் சேதுபதி ஆர்வமாக இருப்பதால்தான் இது தீவிரமாக செயல்படுகிறார் ஆனால் சமீபகாலமாக விஜய் சேதுபதியின் சோலோ திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.