Vijay sethupathi 50th Movie : இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி தனது 50 வது திரைப்படமான “மகாராஜா” என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
அந்த போஸ்டர் கூட அண்மையில் வெளிவந்து வைரலாகி வருகிறது இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலம்ன் சுவாமிநாதன் இயக்க உள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்து முனிஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், மம்தா மோகந்தாஸ், அபிராமி உள்பட பல நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர் பேஷன் ஸ்டுடியோ சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளனர்.
#MaharajaFirstLook@Dir_nithilan @PassionStudios_ @TheRoute @Sudhans2017 @Jagadishbliss @anuragkashyap72 @Natty_Nataraj @mamtamohan @Abhiramiact @AjaneeshB @Philoedit @DKP_DOP @ActionAnlarasu @ThinkStudiosInd @infinit_maze @jungleeMusicSTH @Donechannel1 #VJS50FirstLook #VJS50… pic.twitter.com/7fF5Y2rDao
— VijaySethupathi (@VijaySethuOffl) September 10, 2023
விஜய் சேதுபதி 50வது படமான மகாராஜா படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நடந்தது அப்பொழுது விஜய் சேதுபதி பேசியது.. போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஊடகங்களை அழைக்க வேண்டுமா என கேட்டேன் ஆனால் உன்னுடைய ஐம்பதாவது படம் என்பதால் கண்டிப்பாக அவர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என சொன்னார்கள் எனக்கும் அது சரியான பட்டது.
தற்போது சரியோ தவறோ பாராட்டுறீங்களோ இல்லை திட்டுறீர்களோ எதுவாக இருந்தாலும் அது எனக்கு உறுதுணையாக மட்டுமே இருந்துள்ளது அனைத்திற்கும் நன்றி உங்களுக்கு நான் கடன் பட்டு உள்ளேன். என் வாழ்க்கையில் மிக முக்கியமான புள்ளியை வைத்தவர் நடிகர் அருள்தாஸ் தான். நாங்கள் நான் மகான் அல்ல படம் நடிக்கும் பொழுது பெரிய அளவில் பழக்கமில்லை டப்பிங் பணியின் பொழுது தான் பேசினோம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்காக அவரை பரிந்துரை செய்தேன்.
நான் ஒரு நாள் போனை வீட்டில் வைத்துவிட்டு வாக்கிங் சென்று விட்டேன் திரும்பி வந்து என்னவென்று கேட்டேன் அப்பொழுது சீனு ராமசாமி இயக்கும் தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு உன்னை தானே சொல்லி உள்ளேன் அப்படி தான் அவர் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.