தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி இவர் இதுவரை ராஜா ராணி, மெர்சல், பிகில், தெறி போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் இவர் தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அட்லீ தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தி பக்கம் போய் உள்ளார்.
இப்போ அட்லியே பாலிவுட் கிங்காங் என அழைக்கப்படும் ஷாருக்கான் உடன் கைகோர்த்து ஜவான் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இந்தப் படத்தில் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, விஜய் சேதுபதி மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர் ஜவான் படம் முழுக்க முழுக்க ஒரு ராணுவம் சம்பந்தப்பட்ட ஒரு கதையாக உருவாகி வருகிறது..
இதில் ஷாருக்கான் இரட்டை விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் தளபதி விஜய் தலைகாட்டி விட்டுப் போவார் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன. ஜவான் படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். ஜவான் படத்தில் ஒரு காட்சியில் ஒரு வசனத்தை மாற்ற சொல்லி விஜய் சேதுபதி கூறி உள்ளார்.
ஆனால் அட்லி இருக்கின்ற வசனத்தை பேசினால் போதும் மற்ற எதுவும் தேவையில்லை என கூறியுள்ளார். உடனே கடுப்பான விஜய் சேதுபதி கையில் இருந்த பேப்பரை தூக்கி கடாசி உள்ளார் இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த தீபிகா படுகோன் உட்பட பல முன்னணி நடிகர்களே ஆச்சரியப்பட்டு போனார்கள். மேலும் படப்பிடிப்பு இதனால் 4 மணி நேரம் தொடங்கப்படாமல் இருந்ததாம். பின் கடைசியாக அட்லி மற்றும் விஜய் சேதுபதியை சமாதானப்படுத்தி சூட்டிங் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.