அண்மைகாலமாக ஹீரோ படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மற்றொரு டாப் ஹீரோ நடிப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கிறது படமும் வெளிவந்து நல்ல வசூலை அள்ளுகிறது அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து எடுத்த திரைப்படம் விக்ரம்.
இந்த படம் முழுக்க முழுக்க போதைப்பொருள் கும்பலை தடுத்து அழிப்பது போன்ற கதையாக இருந்தாலும் சற்று வித்தியாசமாக படம் உருவாகி இருந்ததால் தற்போது மக்களுக்கு பிடித்துப்போன திரைப்படமாக இது இருக்கிறது இந்த படத்தில் கமல் ஒரு மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடித்த அசத்தி உள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி பகத் பாசில் சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்கள் நடித்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இன்றும் குறையாமல் இருந்து வருகிறது. இதுவரை விக்ரம் திரைப்படம் 300 கோடிக்கு மேல் vasuleஅள்ளி புதிய சாதனை படைத்து உள்ளது. வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது அண்மையில் வெளிவந்த எந்த ஒரு படமும் இவ்வளவு வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் சீனுராமசாமி கமல் மற்றும் விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது கமலின் விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத ஒரு வசூலை அள்ளிக் கொண்டு வருகிறது இது தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது என கூறினார்.
இந்த படம் இப்படி இருக்க ஒரு சமயத்தில் கமல் நடிப்பில் மன்மதன் அம்பு படம் ரிலீஸ் ஆனது. அதே நாளில் நான் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் ரிலீஸ் ஆகியது. உடனே நானும் விஜய் சேதுபதியும் திரையரங்கிற்கு வந்து எத்தனை பேர் படம் பார்க்கிறார்கள் என பார்த்தோம் இரண்டு பேர் மட்டுமே தென்மேற்கு பருவகாற்று படத்தை பார்த்தனர் மற்றவர்கள் அனைவரும் மன்மதன் அம்பு படத்தை பார்க்க போய் விட்டனர்.
ஆனால் அப்போது விஜய் சேதுபதி ரொம்ப கடுப்பாகி போனார். இருப்பினும் தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக வளர்ந்து தற்பொழுது உச்ச நட்சத்திரமாக மாறினார் மேலும் டாப் ஹீரோக்களுக்கு நிகராக அவர் படங்களில் நடிப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அதுவும் விக்ரம் திரைப் படத்தில் கமலுக்கு வில்லனாக மிரட்டியிருந்தார் என கூறினார்.