விஜய், கமலை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமான விஜய்சேதுபதி.? படத்தின் டைட்டில் வித்தியாசமா இருக்கு..

vijay-sethupathy

பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தவர் நடிகர் கார்த்தி. முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழ் சினிமா உலகில் உள்ள அனைத்து இயக்குனர் கண்களில் பட்டார். அதன் விளைவாகவே தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார் நடிகர் கார்த்தி தற்போது பல்வேறு திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். அந்த வகையில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 வெளியாக இருக்கிறது சர்தார் தீபாவளிக்கே வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு 31 கார்த்தியின் விருமன்  திரைப்படம் வெளியாக இருக்கிறது இப்படி அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ள நிலையில் படங்கள் வெளிவருவதற்கு முன்பாகவே அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்கவும் செய்கிறார் .

அந்த வகையில் ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜூமுருகன் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார் இந்த படத்திற்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்திற்கு ஜப்பான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது குறிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இதுவரை விஜய் ரஜினி கமல் போன்ற நடிகர்களுக்கு மட்டுமே வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது கார்த்திக்க்கு வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.