தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா ஆய்வுகளை வைத்து காற்றுவாக்கில் 2 காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது முழுக்க முழுக்க காதல் மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ஏற்கனவே நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இத்திரைப்படம் எதிர்பாராத வகையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் உருவான காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் பிரபு போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள் டப்பிங் செய்து முடிந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கான டப்பிங் வேலையில் இறங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இதனை புகைப் படத்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இத் திரைப்படமானது வருகின்ற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.