தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக நடித்திருந்தாலும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடிக்க முடியாமல் தள்ளாடி வருபவர் நடிகர் விமல். இவர் சினிமா ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் போகப்போக தனது திறமையை வெளிப்படுத்தி ஹீரோவாக அறிமுகமானார்.
முதலில் பசங்க படத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் அதன்பின் காமெடி கலந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தன. அதை சரியாக பயன்படுத்தி வெற்றி குவித்து இருந்தாலும் காலப்போக்கில் இவரது படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் ஒரு கட்டத்தில் சுத்தமாக பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இதிலிருந்து மீண்டு வர அவரும் சிறப்பு அம்சம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து தான் பார்க்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா உலகில் நான் ஹீரோவாக நடிக்க காரணம் விஜய் சேதுபதி என யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் நடிகர் விமல் அவர் சொன்னது.
இயக்குனர் பாண்டிராஜ் பசங்க படத்திற்காக ஹீரோவை தேர்வு செய்து கொண்டிருந்தார் இதை அறிந்த விஜய் சேதுபதி அங்கு போயுள்ளார் ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. விஜய்சேதுபதி உடனே விமலிடம் வந்து போன இடத்தில் வாய்ப்பு இல்லை என கூறி உள்ளார்.
நீ போ உனக்கான வாய்ப்பு கிடைக்கும் என கூறி உள்ளார் இதனையடுத்துக் நடிகர் விமல் போய் கலந்து கொண்டு தேர்வாகினர். ஒருவழியாக பசங்க படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் இருந்து தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து தன்னை ஹீரோவாக தக்கவைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.