தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருவர் விஜய் சேதுபதி. இவர் அண்மைகாலமாக ஹீரோ, வில்லன் குணசத்திர கதாபாத்திரம், கேஸ்ட்ரோல என எந்த கதாபாத்திரம் வந்தாலும் அந்த வாய்ப்பை விடாமல் நடந்து வருகிறார் அதனால் என்னவோ இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அதற்கு ஏற்றார் போல விஜய் சேதுபதியும்.. தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்து வருகிறார் குறிப்பாக தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க டபுள் மடங்கு சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட விஜய் சேதுபதி 4, 5 படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் விடுதலை, மேரி கிறிஸ்மஸ்..
காந்தி டாக்கீஸ், மும்பைக்காரர், ஜவான் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதில் முதலாவதாக வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை.. படத்தின் முதல் பாகம் திரைப்படம் வருகின்ற மார்ச் 30 தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களுக்கும் போலீசுக்கும் இடையே நடக்கும் ஒரு கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
படத்தில் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து சூரி, கௌதம் வாசுதேவ் மேனன், சரவணா சுப்பையா, பிரகாஷ்ராஜ், ராஜூமேனன், சேத்தன், இளவரசு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் விடுதலை படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன அதன்படி அண்மையில் விடுதலை திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூரி சுமார் 40 லட்சம்..
சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி விடுதலை படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் சேதுபதி சுமார் 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.