மக்கள் செல்வன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோ அந்தஸ்தையும் தாண்டி கேஸ்ட் ரோல், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக்கொண்டிருப்பதால் இவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது தமிழை தாண்டி தற்பொழுது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வாய்ப்புகள் குவிகிறது.
அதன் காரணமாகவே நடிகர் விஜய் சேதுபதி தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்தியுள்ளார் தற்பொழுது ஒரு படத்திற்காக குறைந்தது 15 கோடியிலிருந்து சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்சேதுபதி அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதால் குறைந்தது வருடத்திற்கு சுமார் 12க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விடுகிறார் என சொல்லப்படுகிறது.
இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக தான் இருந்து வந்துள்ளன. ஆனால் நடிகர் விஜய்சேதுபதி வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்கள் தான் ஆனால் ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றி படங்களாக என்றால் அதைக் கேள்விக்குறி தான் ஏன் அண்மையில் சீனி ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாமனிதன் திரைப்படம்.
மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இதை உணர்ந்த சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் உங்களுக்கு ஹீரோ ரோலை விட வில்லன் ரோல் தான் ரொம்ப பொருந்துகிறது இனிமே நீங்க வில்லனாக நடிகர்கள் எனக்கூறி கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர்.
இதை உணர்ந்து கொண்ட விஜய்சேதுபதி இனிமேல் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க போவது இல்லை ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் உள்ள திரைப்படங்களில் நடிக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளாராம் மேலும் தன்னை நம்பி வரும் இயக்குனர்களுக்கும் இது போன்ற கதைகள் இருந்தால் மட்டுமே கேட்பதற்கு ரெடியாக இருக்கிறாராம் விஜய் சேதுபதி இதனால் ஒரு சில இயக்குனர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.