பிக்பாஸ் 6 – ல் என்ட்ரி கொடுக்கும் விஜய்சேதுபதி பட நடிகை..! அட இவரா.?

bigboss
bigboss

மக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அக்டோபர் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட உள்ளது. விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பான பிக் பாஸ் ஐந்து சீசன்களையும் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். அதேபோல வருகின்ற ஆறாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

அதற்கான ப்ரோமோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகின. இது ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் அளவிற்கு வேறு யாராலும் கொண்டு செல்ல முடியாது. அந்த அளவிற்கு தனது பேச்சு திறமையின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை கட்டிப்போட்டவர் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சி ஹிட் அடிக்க முக்கிய காரணம் கமலும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில மாதங்களாகவே பிக் பாஸ் ஆறாவது சீசனுக்கான  போட்டியாளர்களை தேர்வு செய்து வந்தனர். அதன்படி தற்போது வரை விஜே ரக்சன், டிடி, பாடகி ராஜலட்சுமி, ரோஷினி ஹரிப்ரியன், விஜே அர்ச்சனா, தர்ஷா குப்தா, ஆயிஷா, ஷில்பா மஞ்சுநாத் போன்றவர்களின் பெயர்கள் சோசியல் மீடியாவில் பிக் பாஸ் ஆறில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என பேசப்பட்டு வந்தன.

ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.. இதே போல தற்போது ஒரு பெயரும் பேசப்பட்டு வருகின்றன. ஆம் பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி பிக் பாஸ் ஆறில் கலந்து கொள்ள இருக்கிறார் என கூறப்படுகிறது. இவர் தற்போது தான் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டு வருகிறார் மேலும் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து.

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் மைனா நந்தினி. இவர் தற்போது பிக் பாஸ் ஆறில் கலந்து கொள்ள இருக்கிறார் என பேசப்பட்டு வருகின்றன ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி நிகழ்ச்சி டெலிகாஸ்ட் ஆகும் போது தான் தெரியும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.