தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் அட்லி இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழில் முதன்முதலாக ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா மற்றும் ஜெய் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் வைத்த பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் அட்லி அவர்கள் சமீபத்தில் தமிழ் சினிமாவில் சாதித்தது மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சாதிக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளார்.
அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க போவது நடிகர் விஜய் சேதுபதி தான் என சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு செய்திகள் உலாவி வந்தன இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்கள் ஏனெனில் பாலிவுட் பக்கமும் விஜய் சேதுபதி தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை காட்டப் போகிறார் என்று நினைத்தார்கள்.
இவ்வாறு பெரும் நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது போல் விஜய் சேதுபதி அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அட்லி கேட்ட தேதியில் சரியான கால் சீட் விஜய் சேதுபதியால் கொடுக்க முடியாத காரணத்தினால் தான் இன்னும் சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல் இன்னும் சிறிது நாட்கள் ஆனால் அதான் தெரியும் விஜய் சேதுபதி என்ன முடிவு எடுப்பார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த திரைப்படத்தை காட்டிலும் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆன புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நமது விஜய் சேதுபதிக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்படி தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி கால் சீட் வேண்டுமென்றால் கொஞ்சம் பொறுத்து இருந்து தான் ஆக வேண்டும்.