விக்ரம் திரைப்படத்திலிருந்து அதிரடி ஆக்ஷன் காட்சிகளை வெளியிட்டு வாழ்த்துக் கூறிய விஜய் சேதுபதி.!

vikram
vikram

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில ஆண்டுகளாகவே எந்த ஒரு திரைப்படமும் வெளியாகமல் இருந்துவந்தது இந்த நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் திரையில் தோன்றுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். இந்த நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கமலஹாசன் நடித்துள்ளார் இவர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் பகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக  படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 15ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்துவதற்கு கமலஹாசன் திட்டமிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் அன்பறிவு என்ற இரட்டையர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய்சேதுபதி வாழ்த்தை கூறியுள்ளார். இவர் அதற்காக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது விக்ரம் திரைப்படத்தில் அன்பறிவு அமைத்த ஸ்டண்ட் காட்சிகளை வெளியிட்டு அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அன்பறிவு சண்டைக்காட்சிகளை மேக்கிங் செய்வதுபோல் இருக்கிறது.

இதோ அந்த வீடியோ.