தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருவர் இயக்குனர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி மொத்த வித்தையும் கத்துக் கொண்டு சினிமா உலகில் ராஜா ராணி என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார். முதல் படமே இயக்குனர் அட்லிக்கு வெற்றி படம் தான்.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் உடன் கைகோர்த்து தெறி, மெர்சல், பிகில் போன்ற அடுத்த அடுத்த மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார் தமிழ் சினிமாவில் வெற்றியை மட்டுமே கண்டு வந்த அட்லீ அடுத்ததாக உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், ரஜினி, கமல் போன்ற நடிகர்களை வைத்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அட்லியோ திடீரென பாலிவுட் பக்கம் படை படை எடுத்தார்.
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஒரு சூப்பரான கதை சொல்லி தற்பொழுது ஓகே வாங்கி “ஜவான்” படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இந்த படத்தில் ஷாருக்கானுடன் கைகோர்த்து நயன்தாரா, யோகி பாபு, மல்கோத்ரா, பிரியாமணி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் ஷாருக்கான் சற்று வித்யாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார் ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ராணுவ சம்பந்தப்பட்ட ஒரு கதையாக இருக்கும் என தெரிய வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்தது ஆனால் இது அதிகாரபூர்வமாக சொல்லப்படாமல் இருந்ததால் ரசிகர்கள் குழம்பி போய் கிடந்தனர்.
ஆனால் சமீபத்தை பேட்டி ஒன்றில் அவரிடம் அனிருத் வெளிப்படையாக கேட்டார் நீங்கள் ஜவான் படத்தில் நடிக்கிறீர்கள் என கேட்டதற்கு ஆமாம் என அதை உறுதிப்படுத்தினார். இதனால் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் மேலும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.