பிரபல இயக்குனரை நம்ப வைத்து கழுத்து அறுத்த விஜய் சேதுபதி.. எல்லாம் காசு படுத்தும் பாடு

vijay-sethupathy
vijay-sethupathy

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் கூட வருடத்திற்கு ஒன்னு அல்லது இரண்டு படங்கள் தான் நடிக்கின்றனர். ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மட்டும் வருடத்திற்கு குறைந்தது 6 லிருந்து 12 படம் வரை நடிக்கிறார் என சொல்லப்படுகிறது அதற்கு காரணம் ஹீரோ, வில்லன், குணச்சித்ர கதாபாத்திரம்,கெஸ்ட் ரோல் என அனைத்திலும் நடிக்கிறார்.

விஜய் சேதுபதியிடம் மிகப்பெரிய நம்பிக்கை என்னவென்றால் தன்னை நம்பி வரும் கதைகளை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டாராம்.. இதனாலையே விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிவதோடு நாளுக்கு நாள் அவரது சம்பளமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழில் கிட்டத்தட்ட ஒரு படம் பண்ண 10 கோடி வாங்குகிறார் ஆனால் அதே தெலுங்கு, ஹிந்தி என்றால் அதைவிட அப்படியே டபுளாக கேட்டு வருகிறாராம்.. தற்போது ஹிந்தியில் இரண்டு படம் பண்ணி வருகிறார் இருந்தாலும் தமிழிலும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்துள்ளது.

அதில் ஒன்று சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி அரண்மனை நான்கில் நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது. ஏற்கனவே வெளியான அரண்மனை சீரிஸ் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் அதன் நான்காவது பாகத்தை எடுக்க சுந்தர். சி ரெடியாக இருக்கிறார். முதலில் இந்த படத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார் விஜய் சேதுபதிக்கு ரொம்ப பிடித்து போகவே முதலில் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டாராம்..

ஆனால் தற்பொழுது கிடைத்த தகவல் என்னவென்றால் அரண்மனை நான்கிலிருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளாராம் காரணம் ஏப்ரலில் அரண்மனை நான்காம் பாகத்தின் சூட்டிங் தொடங்கப்பட இருக்கிறதாம் விஜய் சேதுபதி தொடர்ந்து ஜவான் மற்ற படங்களில் பிஸியாக நடிப்பதால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை எனவே இதிலிருந்து விலகி உள்ளார் என சொல்லப்படுகிறது.