பாலிவுட்டில் முன்னணி நடிகரின் திரைப்படத்தை தூக்கி எறிந்த விஜயசேதுபதி.! யார் திரைப்படம் தெரியுமா.!

vijay sethupathi

சமீபத்தில் பாலிவுட் திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அதேபோல் பாலிவுட் சினிமாவில் இதுபோல் சம்பவம் நடைபெறுவது வழக்கம் தான் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது லால் சிங் சதா என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் இந்த திரைப்படத்தில் தான் விஜய் சேதுபதி கமிட்டானார். ஆனால் அமீர்கான் விஜய் சேதுபதி உடலை குறைக்க முடியாது எனக் கூறி விஜய் சேதுபதியை தூக்கி எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார். அமீர்கான் அந்த திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதியை தூக்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் பிரச்சினைகள் ஓய்ந்த பிறகு இந்த திரைப்படத்தில் கால்ஷீட் பிரச்சனையால் தான் நடிக்க முடியவில்லை என விஜய் சேதுபதி ஓப்பனாக கூறினார்.

vijay sethupathy
vijay sethupathy

இந்த நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சமந்தாவின் காதல் கணவர் நாகசைதன்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் நடிகர்களுக்கு இந்தி பட வாய்ப்பு ஈஸியாக கிடைத்து விடும் ஆனால் தமிழ் நடிகர்களுக்கு  மிக மிக கடினம் ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர்கள் பாலிவுட் பக்கம் சென்று கால்தடம் பதித்து வருகிறார்கள்.

அதிலும் விஜய் சேதுபதி பாலிவுட்டில் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதேபோல்தான் தனுஷ் சொல்லவே தேவையில்லை. அமீர்கான் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்தது இப்பொழுது அந்த கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடிப்பதால் நாக சைதன்யா ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.