நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாக பிரபலமான பிறகும் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற கிடைக்கின்ற கதாபாத்திரங்களில் அனைத்திலும் நடித்து வருடத்திற்கு ஆறு ஏழு திரைப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். மேலும் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னை முற்றிலும் ஈடுபடுத்தி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து வருகிறார்.
அந்தவகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் அப்போது வெளியாகி விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தை எடுக்க தயாராக இருந்தார் அப்போது விஜய்சேதுபதி லோகேஷ்க்கு போன் செய்து விக்ரம் படத்தில் கமலுடன் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடு எனக் கேட்டுள்ளார் மேலும் கமலஹாசன் எப்படித்தான் நடிப்பை உள்வாங்கி நடிக்கிறார்.
அவரது மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை நான் பார்க்க வேண்டும் என ஆசையாக விஜய் சேதுபதி கூறியுள்ளார். ஆனால் அப்போது லோகேஷ் மறுத்துவிட்டார் பின்பு விஜய் சேதுபதி எப்படியும் நீ என்கிட்ட வந்து தான் ஆக வேண்டும் என அமைதியாக இருந்தார்.
பின்பு ஒருநாள் லோகேஷ் விஜய் சேதுபதியை நாடி விக்ரம் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார். விஜய் சேதுபதியும் அவரது பல நாள் ஆசையை கமலுடன் விக்ரம் படத்தில் நடித்து தீர்த்துக் கொண்டார். விஜய்சேதுபதி தமிழை தவிர தற்போது பாலிவுட்டிலும் கால் தடம் பதித்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.