கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி விக்கி மற்றும் நயன்தாரா அவர்களது கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது அதில் சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர். ஆனால் இவர்களது திருமணம் வெகு கட்டுப்பாடுகளுடன் கவனமாக நடைபெற்றது.
கல்யாணத்தில் பங்கு பெற்றவர்கள் அனைவரும் திருமண இடத்திற்குள் போன் வைத்திருக்கக் கூடாது. மற்றும் அவர்கள் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வர தனியாக கேரவன் போன்ற பல கட்டுப்பாடுகள் நடைபெற்றது. இதனால் திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் வெளிவராமல் இருந்தது
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மட்டும் அவரது சமூக வலைதள பக்கங்களில் நயன்தாராவிற்கு தாலி கட்டி ஒரு சில முக்கிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். கல்யாணத்திற்கு சென்றிருந்த வேறு யாரும் எந்த புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிடாமல் இருந்து வந்த நிலையில்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் ஆகி தற்போது ஒரு மாதம் கடந்துள்ளது. அதனை வெளிப்படுத்தும் வகையில் நேற்று விக்னேஷ் சிவன் சில அரிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கல்யாணத்தில் விஜய் சேதுபதி அவரது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
விக்னேஷ் இவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற இரு படங்களில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆவார்கள்.