நடிகை மாளவிகா மோகனன் “பர்த் டே” பார்ட்டியில் விஜய் சேதுபதி – ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம்..!

malavika-mohanan-

பிறமொழி நடிகைகள் எடுத்த உடனேயே தமிழில் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து அசத்துகின்றனர். அந்த வகையில் மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் காலடி எடுத்து வைத்த உடனேயே உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை தற்போது மிகப் பெரிய அளவில் உயர்த்தி உள்ளார்.

முதலில் ரஜினியின் பேட்டை படத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் பிரபலமடைந்தார். அதன்பின்  நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்து மாறன் திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படம் சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவு கவனத்தை ஈர்க்கவில்லை. தற்பொழுது மற்ற மொழிகளிலும் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருவதால் நடித்து வருகிறார்.

சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை ருசித்தாலும் ரசிகர்கள் தான் தன்னை அடுத்த தலைமுறைக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதை நன்கு உணர்ந்து ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படியான புகைப்படங்களையும் அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் இவரை பின்பற்றுவோரின்  எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இப்படி இருப்பதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மாளவிகா மோகனன் சில தினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பல முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் அவரது நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதிலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி மாளவிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.  அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது. விஜய் சேதுபதி மாளவிகா மோகனன் இருவரும் இணைந்து பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதோ விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இருக்கும் அந்த அழகிய புகைப்படம்.

malavika and vijay sethupathy