தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க இளம் இயக்குனர் ஹச். வினோத் உடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படமான துணிவு..
திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தில் அஜித் நெகடிவ் கதாபாத்திரத்தில் செம்ம மாஸாக நடித்துள்ளார் என தெரிய வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரகனி, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நயன்தாராவின் கணவரும்.. இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் சூட்டிங் மிக விரைவிலேயே நடத்தப்பட இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்தின் ஏகே 62 குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் சொன்னது என்னவென்றால் விக்னேஷ் சிவன் தன்னிடம் ஏ கே 62 படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை கூறினார் என தெரிவித்தார் அந்த கதை விஜய் சேதுபதிக்கு பிடித்திருந்தால் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது என கூறினாராம் இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் இந்த தகவலை இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர்.