நடிகர் சிம்பு சிறு வயதிலிருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் இவர் சிறு வயதிலிருந்தே நடனம் ஆடுவதில் வல்லவர் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அது மட்டுமில்லாமல் சிம்பு ஒரு காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் இடையில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்தார் இந்த நிலையில் மீண்டும் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சிம்பு நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று வருகிறது. அதேபோல் விஜய்சேதுபதி அவர்களும் வருடத்திற்கு அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வெளியிட்டு வருகிறார். அதில் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன இந்த நிலையில் சிம்புவும் விஜய் சேதுபதியும் மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்திலும், பத்துதலை என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இயக்குனர் கோகுல் மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் நகைச்சுவைத் திரைப்படமான கொரானா குமார் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர் தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி சுமார் மூஞ்சி குமார் என்ற கெட்டப்பில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
மேலும் இந்த திரைப்படம் ஹிட் அடிக்கும் எனவும் கிட்டத்தட்ட இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படம் போல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு விஜய் சேதுபதி மீண்டும் இணைவதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.