வெளியானது அன்பெல் சேதுபதி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ.!

தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் பேச்சாலும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன மறைந்த எஸ்பி ஜனநாதன்  இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் லாபம் இந்த திரைப்படம்  திரையரங்குகளில் வெளியானது.

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டெல்லி பிரசாந்த் தீனதயாள் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் அரசியல் கலந்த துக்ளக் தர்பார் திரைப்படம் மாலை ஆறு முப்பது மணிக்கு நேரடியாக சன் தொலைக்காட்சியில் ரிலீசானது இந்த திரைப்படம் ott இணையதளமான நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இப்படி மக்கள் செல்வன் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி வருவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் டாப்சி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் அனபெல் இந்த திரைப்படம் நேரடியாக ott இணையதளமான  ஹாட்ஸ்டார் இல் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை தீபக் சௌந்தராஜன் இயக்கியுள்ளார் அதேபோல் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ஜெகபதி பாபு ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து ஸ்நீக் பீக்  வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதேபோல் இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.