தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் மைக்கேல் என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் தான் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.
இவருடைய நடிப்பில் உருவான இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்த நிலையில் தற்போது ‘மைக்கேல்’ என்ற திரைப்படத்தினை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் முக்கியமாக கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அடுத்து திவ்யன்ஷா கௌஷிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களை அடுத்து சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மைக்கேல் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை நைஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரன்சி ப்ரோடுக்ஷன் எல்எல்பி ஆகிய நிறுவனம் இணைந்து உருவாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது மைக்கேல் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தில் பாலகிருஷ்ணா, ஜெயம் ரவி, அனிருத் ரவிச்சந்திரன், நிவின் பாலி ஆகியோர் இணைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர் அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.