தற்போது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சில வாரிசு நடிகர், நடிகைகளால் பெரிதாக பிரபலம் அடைய முடியவில்லை. ஒரு சில வாரிசு நடிகர், நடிகைகள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து சீனிமாவில் தங்களுக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்கள்.
இந்நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மற்றும் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் வாரிசு நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் வாரிசு நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழில் கலக்கி வருபவர் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் 80-90 காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் ஆவார்.
கௌதம் கார்த்திக் தனது அப்பா போலவே அவர் நடிக்கும் திரைப் படங்களின் கதைகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகராகவும், துணை நடிகராகவும் தொடர்ந்து நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.
இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் எந்த படமும் சொல்லும் அளவிற்கு வெற்றியைத் தரவில்லை. இருந்தாலும் மற்ற வாரிசு நடிகர், நடிகைகளைப் போல சினிமாவை விட்டு வெளியேறி விடாமல் தொடர்ந்து தனது கவனத்தை சினிமாவில் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கௌதம் கார்த்திக் செல்லப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அருண் சந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படம் கொரானா காலத்திலும் பல கட்டுப்பாடுகளுடன் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிசரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று 11:05 மணிக்கு வெளியாகும் என்று பட குழுவினர்கள் அறிவித்திருந்தார்கள். அந்த வகையில் மோஷன் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி ஆகிய மூவரும் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளார்கள்.அந்த வகையில் இவர்கள் மூவரும் இருக்கும் போஸ்டர் வெளிவந்துள்ளது.