யோகி பாபுவிற்கு சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பிய விஜய்.! விலை எவ்வளவு தெரியுமா.?

vijay

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வரும் நடிகர் யோகி பாபு  அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் மேலும் திரைப்படங்களில் நடித்துவிட்டு பிறகு வேலையில்லாத நேரத்தில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையை கவனித்த நடிகர் விஜய் அவருக்கு தற்பொழுது கிரிக்கெட் பேட்டை ஒன்று சப்ரைஸ்சாக அனுப்பி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் யோகி பாபு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் தற்பொழுது முன்னணி நடிகர்கள் அளவிற்கு வளர்ந்துள்ள இவர் காமெடி மட்டும் இன்றி கதையின் கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்த வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் மண்டேலா.

மிகவும் காமெடி கலாட்டா உடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தினை மடோனா அஸ்வின் இயக்க சலூன் கடை நடத்திய நபராக யோகி பாபு நடித்திருந்தார். அந்த வகையில் இந்த படத்திற்கு சிறந்த வசனம் மற்றும் சிறந்த இயக்குனராகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்தது. இதனை அடுத்து தற்பொழுது இவர் பொம்மை நாயகி மற்றும் மலை ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த வருகிறார்.

மேலும் பொம்மை நாயகி திரைப்படத்தினை பா ரஞ்சித் இயக்கி வருகிறார் அதேபோல் மலை திரைப்படத்தில் லட்சுமிமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் ஹச் வினோத் யோகி பாபுவை வைத்து ஒரு படம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இவ்வாறு பிசியாக இருந்து வரும் யோகி பாபு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உடையவர். ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம் கிரிக்கெட் விளையாடி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

yoki papu
yoki papu

மேலும் அது குறித்த வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இவருடைய கிரிக்கெட் திறமையை தெரிந்து கொண்ட நடிகர் விஜய் கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்ட்டாக அனுப்பி வைத்துள்ளார். அதனை கையில் பிடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி கூறி யோகி பாபு பதிவு செய்துள்ளார் இவ்வாறு இந்த பேட்டின் விலையை நெட்டிசன்கள் தேடி வந்த நிலையில் தற்பொழுது அந்த பேட்டின் விலை ரூபாய் 10 ஆயிரம் என தெரியவந்துள்ளது.