பொதுவாக சீனிமாவில் நடிகைகளைவிடவும் நடிகர்களுக்கு தான் சம்பளமாக இருந்தாலும் மரியாதையாக இருந்தாலும் அதிகமாக கிடைக்கும் அந்த வகையில் தனது அப்பா இயக்குனராக இருந்தாலும் தனது விடாமுயற்சியினால் சினிமாவில் வளர்ந்து தற்போது புகழின் உச்சத்தில் இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் குறைந்த அளவு சம்பளம் மற்றும் பல தோல்விகளையும் சந்தித்தார்.
அதன் பிறகு ரசிகர்களின் பேவரைட் நடிகராக இவர் மாறியதால் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு தற்பொழுது இவர் எந்த அளவிற்கு சினிமாவில் வளர்ந்து உள்ளாரோ அதைவிடவும் அதிகமாக இவரின் சம்பளம் உயர்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 70 வயதில் வாங்கிய சம்பளத்தை நடிகர் விஜய் தனது 47வது வயதிலேயே பெற்றுவிட்டதாக பலர் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்தியாவையும் தாண்டி இவரின் புகழ் உலக அளவில் பிரபலமடைந்து உள்ளது.எனவே இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. எடுத்துக்காட்டாக சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அந்த வகையில் இவரின் அப்பாவான எஸ் ஏ சந்திரசேகரன் இவர் இயக்கும் திரைப்படங்களில் தான் தனது மகனான விஜயை நடிக்க வைத்து வந்தார்.ஆனால் விஜய்க்கு இந்த திரைப்படங்கள் பெரிதாக சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தராத காரணத்தினால் விஜய் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு ஆரம்பித்தார்.
அந்த வகையில் விஜய் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்தார்.இத்திரைப்படத்தில் விஜயை வைத்து விக்ரமன் இயக்குவதற்காக பலரும் இவரை விஜய்யை வைத்து திரைப்படத்தை இயக்க வேண்டாம் என்று கூறி வந்தார்கள் ஆனால் விக்ரமன் தனது தைரியத்தினாம், விஜயின் மீது இருந்த நம்பிக்கையினாளும் இந்த திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற வைத்தார்.
இதனை தொடர்ந்து விக்ரமனின் அடுத்த திரைப்படத்திலும் விஜய் தான் நடித்தார். அந்த வகையில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற திரைப்படம் தான் பூவே உனக்காக திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.இப்படம் விஜய்யின் திரைவாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம்.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது விஜய் வெறும் ஐந்து லட்ச ரூபாய்தான் சம்பளமாக பெற்றாராம் அதன் பிறகு அடுத்த மூன்று வருடத்திற்குள் தனது திறமையை வளர்த்துக்கொண்டு 22 லட்சம் சம்பளமாக பெற்றார். இந்த தகவல் தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.