Vijay salary in leo movie தளபதி விஜய் கடைசியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது அதாவது அக்டோபர் 19ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
leo திரைப்படம் ரிலீஸ் ஆனதும் திரையரங்கமே திருவிழா போல் காட்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் leo திரைப்படத்தின் சூட்டிங் முடிவதற்கு முன்பே பிசினஸில் பட்டையை கிளப்பியதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக பலரும் தகவல் தெரிவித்தார்கள் அதேபோல் விஜய்யின் சம்பளமும் இந்த திரைப்படத்தில் அதிகரித்துள்ளதாக பல விமர்சனங்கள் வெளியானது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து அப்செட் ஆன தயாரிப்பாளர்கள் வேறு வழி ஒன்றை யோசித்துள்ளார்கள் அதாவது அக்டோபர் 18 ஆம் தேதி பிரிமியர் ஷோவை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் இதனால் வசூல் ஏகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் விஜயின் சம்பளம் எவ்வளவு என்று தகவல் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது .
பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் அதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்தில் 120 கோடி சம்பளம் எனவும் கூறப்பட்ட நிலையில் தற்பொழுது எதிர்பார்க்காத வகையில் இன்னும் 10 கோடி அதிகரித்து லியோ திரைப்படத்திற்கு 130 கோடி வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயின் அடுத்த திரைப்படத்திற்கு அதாவது தளபதி 68 திரைப்படத்திற்கு 175 கோடி சம்பளமாக ஆரம்பத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் 130 கோடியில் இருந்து ஒரேடியாக 40 கோடி சம்பளத்தை ஏற்றுவாரா விஜய் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அதனால் இந்த தகவலில் பெரிதாக உண்மை இருக்காது எனவும் கூறி வருகிறார்கள்.