நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறி வருகின்றன அதனால் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு ஹீரோவாக இருந்து வருகிறார் இவர் தற்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதேசமயம் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்திலும் தளபதி விஜய் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களையும் தளபதி விஜய் வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக தனது 67-வது படத்தில் நடிப்பார் இந்த படத்தை லோகேஷ் இயக்க உள்ளார். அவர் தற்பொழுது கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளாராம் அதே சமயம் இந்த படத்திற்கான நடிகர், நடிகைகளையும் தேர்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
சினிமா உலகில் ஹீரோவாக நடித்த வரும் விஜய்க்கு வில்லன் ரோலும் சூப்பராக பொருந்தோம். அதை அழகிய தமிழ் மகன் படத்தில் கூட நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் அதன் பிறகு தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது ஏ ஆர் முருகதாஸ் விஜயை வைத்து கத்தி, துப்பாக்கி, சர்க்கார் ஆகிய படங்களை எடுத்துள்ளார்.
அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான்… அதை தொடர்ந்து ஏ. ஆர். முருகதாஸ் விஜயை வைத்து துப்பாக்கி 2 படத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின இதற்கிடையே தனது பேட்டி ஒன்றில் மகேஷ்பாபு மற்றும் விஜய் காம்பினேஷன் குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
விஜய்க்கு மகேஷ் பாபுவை வில்லன்னாக.. புதிய கான்செப்ட் தான் விஜயை அனுப்பியதாகவும் அவர் உடனே ஓகே சொன்னதாகவும் ஆனால் மகேஷ்பாபு நடித்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன் என கூறியதாகவும் ஏ ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். இதில் மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால் தமிழில் விஜய் ஹீரோ.. மகேஷ்பாபு வில்லன்.. தெலுங்கில் மகேஷ்பாபு ஹீரோ.. விஜய் வில்லன்.. என்ற காரணத்தினால் தான் விஜய் ஓகே சொல்லி உள்ளார் என சொல்லப்படுகிறது.