தமிழ் சினிமா உலகில் பாடகராகவும் நடிகராகவும் விளங்கி வருபவர் யுகேந்திரன். இவர் சினிமா உலகில் இதுவரையிலும் 600க்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் அதிலும் இவர் சில பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவுலகில் பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் மேலும் அவர் தளபதி விஜயுடன் இணைந்து யூத், பகவதி ,மதுர, திருப்பாச்சி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம்வந்தார். மேலும் அவர் உள்ள காதல், அலையடிக்குது ,முதல்கனவே, பச்சை நிறமே, ராஜாதிராஜா, யுத்தம் செய் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்தார்.
இந்த நிலையில் நடிகர் யோகேந்திரன் அவர்கள் பேட்டி ஒன்றில் அஜித், விஜய் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் கூறியிருந்தது. நான் நடிக்கும் காலத்தில் விஜய் மிகப் பெரிய அளவில் பந்தா காட்டுவார் என நினைத்தேன் அவர் ஒன்றும் அப்படி கிடையாது ஆனால் அவருடன் இருப்பவர்கள் அவரை தொடாதீர்கள் இப்படி பண்ணாதீர்கள் என நிறைய ரூல்ஸ் போடுவார்கள் ஆனால் விஜய் அவர்கள் அதிலிருந்து மாறுபட்டவர் எல்லோரிடமும் நண்பர் போல சிறப்பாக பழகக்கூடியவர் என கூறினார். பெஸ்ட் ஹீரோ என்று சொன்னால் அது விஜய்தான். விஜய் சண்டைக் காட்சியை, நடனத்தையும் யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.
அதற்கு நேர் ஆப்போசிட் தல அஜித் தல நம்முடைய வாழ்க்கையை நாம வாழ வேண்டும் என்றும் சொல்லுவார், நீ எப்பொழுதும் ஜாலியாக இரு, உங்களுடைய வாழ்க்கையை நீங்க தான் வாழனும், எதையும் பற்றியும் யோசிக்காதீர்கள் நான் யார் வந்தாலும் எழுந்து நிற்பேன் மரியாதைக்காக எழுந்து நிற்பதை பார்த்து தல ஏன் நிற்கிறீர்கள் மரியாதை மனதில் இருந்தால் போதும் என சொல்வார்கள் யாரிடமும் எதிர்பார்ப்புகளை உருவாக்காதீர்கள் என்று கூறுவார்.
இவர் ஒரு ஸ்டைல் விஜய் ஒரு ஸ்டைல் இரண்டு பேருமே வேற வேற மாதிரி இரண்டு பேருடன் நடிக்கும் பொழுது நல்ல அனுபவங்கள் கிடைத்தது அதிலும் நான் ரொம்ப வியந்து பார்த்த மனிதர் என்றால் அஜித்தை சொல்வேன் அஜித் பார்க்க கொஞ்சம் டெரரா தெரியும் ஆனால் அவர் ரொம்ப சாஃப்ட் அவரு எல்லாத்தையும் வெளிப்படையாக பேசுவார் என்று கூறினார்.