சூட்டிங்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக படத்தை எடுக்க வேண்டாமுன்னு சொன்ன தளபதி விஜய்.? படக்குழுவிற்கு தலை கால் புரியலை..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதிவிஜய் வருடத்திற்கு ஒருமுறையாவது சிறப்பான முறையில் படத்தை கொடுப்பது அவருக்கு கைவந்த கலை அப்படித்தான் சமீப கால படங்கள் ஒவ்வொன்றும் விசேஷ நாட்களில் வெளிவந்த திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

அப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வேற படத்தின் சாதனையை முறியடிப்பது வழக்கம் அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடித்ததோடு வசூலையும் வாரி குவித்தது. அடுத்ததாக விஜய் அவரது 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை இளம் இயக்குனரான நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார்.இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் மீண்டும் விஜய்யுடன் கை கோர்த்து பணி ஆற்ற உள்ளார்.

மிகப்பெரிய பொருட் செலவில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் டாப் நடிகர் நடிகைகளையும் இந்த படத்தை எடுத்த போட்டு வருகிறார் திலீப்குமார் இது படத்திற்கான வெற்றியை தற்போது  ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து உள்ளனர்.

படத்தின் முதல் கட்ட சூட்டிங்கில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் மிகப் பெரிய மால் போன்ற பிரமண்டமான ஒன்றை உருவாக்க இருந்தது  அதற்குள் விஜய் இந்த செட்டை நீங்கள் ரெடி செய்ய வேண்டாம் என தற்போது கூறியுள்ளாராம்.

காரணம் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக நிறுத்தியுள்ளார் மேலும் இதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற அக்கறைதான் நிறுத்தப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தற்பொழுது செய்திகள் கசிகின்றன.