கண்ணம்மாவை பார்த்து ஏன் அப்பாவும் நீங்களும் பிரிச்சிருக்கிங்க என்று கேட்கும் லட்சுமி.! பதறி போன கண்ணம்மா..

bharathi-kannama-serial-actress
bharathi-kannama-serial-actress

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னிலை சீரியலாக இடம்பெற்றுள்ளது மேலும் இதை சீரியல் பலவருடங்களாக தொடர்ந்து வருகின்றன. இதற்கு ரசிகர்கள் அவர்களின் ஆதரவுகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதி கண்ணம்மாவை தவறாக புரிந்து கண்ணம்மாவை எட்டு வருடங்களுக்கு மேலாகியும் தண்டனை கொடுத்து வருகிறார். ஆனால் கண்ணம்மாவின் மேல் ஒரு தப்பும் இல்லை என்று பாரதி இன்று வரை புரிந்துகொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த கண்ணம்மா பாரதி முன்னாடி நல்லா வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே குறிக்கோளாக எடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு பக்கம் வெண்பா பாரதியை எப்படியாவது கல்யாணம் செய்ய வேண்டும் என்று போராடி வருகிறார். இப்பொழுது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்து வருவதால் இவர்களுக்கிடையில் சிறிதளவிலான பாசம், அன்பு இதெல்லாம் வெளிவருகிறது. அப்போது இவர்களின் இரண்டு குழந்தைகளான லட்சுமி கண்ணம்மாவிடமும் ஹேமா பாரதியிடமும் வாழ்ந்து வருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து ஹேமாவிற்கு இதுவரை எந்த உண்மையும் தெரியவில்லை. ஆனால் லட்சுமிக்கு பாரதி தான் தான் அப்பா என்று முன்னதாகவே தெரியவந்தது. ஆனால் இன்று வரையும் லட்சுமி அமைதியாகவே இருந்து வருகிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் பாரதியும் கண்ணம்மாவும் பேசியதை காதில் வாங்கிய லட்சுமி கண்ணமாவிடம் நீங்க இரண்டுபேரும் பிரிந்து வாழ்வதற்கு என்ன காரணம் அப்பா ஏன் விவாகரத்து கேட்கிறார் என்று லட்சுமி கண்ணமாவிடம் கேட்கிறார்.

மேலும், இதைத் தொடர்ந்து கண்ணம்மா மனதளவில் மிகவும் வருத்தப்படுகிறார். லட்சுமியா வியப்பாகப் பார்க்கிறார். எல்லா உண்மையும் தெரிந்தும் இதுவரையிலும் அமைதியாக இருக்கிறத நினைத்தால் வியப்பாக இருக்கிறது. என்று லட்சுமியை அணைத்துக்கொண்டே கண்ணம்மா வருத்தப்படுகிறார். இனிமேலாவது கண்ணம்மாவை பாரதி ஏற்றுக் கொள்வாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

எனவே, பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவனையில் இருப்பதால் கண்டிப்பாக பாரதி கண்ணமாவை புரிந்து கொள்ள நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் பாரதி கண்ணம்மாவை புரிந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.