விஜய் ரூம் ஃபுல்லா இந்த புகைப்படம் தான் ஒட்டி இருக்கும் – பழைய நினைவுகளை பகரும் நடிகர் ஆனந்த்ராஜ்.!

VIJAY-
VIJAY-

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடுபவர் தளபதி விஜய் இவர் தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்து விட்டார் படம் அடுத்த வருடம் பொங்கலை குறிவைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது.

வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் கைகோர்த்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் வெளிவர இன்னும் ஒரு மாதம் இருபதால் அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்திழுக்க ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்த அப்டேட் வேலையை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதற்கான பூஜை அண்மையில் போடப்பட்டது வெகு விரைவிலேயே ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஜய் பற்றி பிரபல வில்லனும்,  குணச்சித்திர நடிகருமான ஆனந்தராஜ் புகழ்ந்து பேசி உள்ளார்   அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தார் அப்பொழுது கேரவன் எல்லாம் கிடையாது.. படத்தில் ஏதாவது வீடு காட்சி வந்தால் எஸ் ஏ சந்திரசேகர் வீட்டில் தான் எடுப்போம் அப்பொழுது அவரது வீடு சாலிகிராமத்தில் இருந்தது அந்த சமயத்தில் விஜய் சிறு வயது பையனாக இருந்தார். அப்படி ஒரு படத்தின் காட்சிக்காக விஜய் வீட்டிற்கு சென்று இருந்தோம்..

அப்பொழுது கேப்டன் விஜயகாந்த்துக்கு ஒரு அறையும், எனக்கும் ஒரு அறை கொடுத்தனர் நான் இருந்த அறை விஜய் பயன்படுத்திய வந்த அறை என கூறினார் மேலும் பேசிய அவர் விஜய் சிறுவயதில் அவரது ரூம் முழுக்க புரூஸ்லீயின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பார் அதை இப்பொழுது நினைத்து பார்க்கையில் சிரிப்பு வருகிறது அப்பொழுது சின்ன பையன் இப்பொழுது இவ்வளவு பெரிய ஒரு உச்ச நட்சத்திரமாக இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது என கூறினார்.