பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை டெல்லியில் முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்.! விமான நிலையத்தில் மாஸ் காட்டிய தளபதி.! வைரல் வீடியோ இதோ.

vijay-
vijay-

தமிழ் சினிமா கொண்டாடும் நாயகனாக வலம் வருவர் தளபதி விஜய். கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து முதல் முறையாக நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்து பீஸ்ட் திரைப்படத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சபீர் போன்ற பல டாப் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். குறிப்பாக இயக்குனர் செல்வராகவன் சமீப காலமாக சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் சாணி காயிதம் தொடர்ந்து அவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜார்ஜியா ஆகிய இடங்களில் நடைபெற்று வந்தது. அதை தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக படத்தின் காட்சிகள் எடுக்கப்பட இருந்தது இதற்காக விஜய்யும் டெல்லி புறப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தீயாய் பரவி வந்த நிலையில் தற்போது அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது. அடுத்ததாக நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்காக ரஷ்யா சென்று இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார. அது குறித்து அப்டேட் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில் விஜய் விமான நிலையத்திலிருந்து கெத்தாக நடந்து வந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கத்தில் ட்ரெண்டாகி வருகின்றன இந்த வீடியோவை பாருங்கள். பீஸ்ட் படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதால் படக்குழு வேகமாக படத்தை எடுத்து வருகிறது.