Actor Vijay rescues 11 women in one phone call: தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்தடிருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய பொது வாழ்க்கையிலும் பல பேருக்கு உதவிகளை செய்து வருகிறார், அதேபோல் தமிழகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு தானாகவே முன்வந்து குரல் கொடுத்து வருகிறார்.
விஜய்-யயை சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல ரசிகர்களுக்கும் பிடிக்கும், இதனால் ஒரே ஒரு போன்கால் மூலம் சென்னையை சேர்ந்த 11 பெண்களை காப்பாற்றி ரசிகர்களிடையே பெருமைப்பட வைத்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக சென்னையை சேர்ந்த வேதிகா என்பவர் தூத்துக்குடியில் உள்ள உறவினர் விட்டிற்கு திருமணத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற பின்பு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் தூத்துக்குடியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, அங்கிருந்து சென்னை வர முடியாமல் தவித்து வந்த வேதிகா சில நாட்கள் கையிலிருந்த காசை வைத்து மண்டபம் கோவில் வாசல் என தங்கி கொண்டிருந்தார், பின்பு தனது கையில் ஒரு பைசா கூட இல்லாமல் 10 பேரை வைத்துக்கொண்டு வேதிகா தடுமாறி உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய்யின் மக்கள் மன்ற உறுப்பினர்கள் உதவி செய்து வந்தார்கள்.
அதேபோல் வேதிகாவின் நிலைமை புரிந்து கொண்டு இந்த செய்தியை மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு கொண்டு சென்றார்கள். உடனடியாக மன்ற நிர்வாகிகள் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் டீசி ஆனந்தி தொடர்பு கொண்டுள்ளார்கள். இந்த விஷயம் உடனடியாக தளபதி விஜயின் பார்வைக்கு சென்றது.
தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த விஜய் ரசிகர்மன்ற ஆளுகளுக்கு கால் செய்து அவர்களை பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார் தளபதி விஜய். இதனையடுத்து தளபதி ரசிகர்கள் அவர்களை முறையாக அனுமதி பெற்று பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
தன்னுடைய ஒரே ஒரு போன் கால் மூலம் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேல் தூத்துக்குடியில் தவித்து வந்த ஒரு குடும்பத்தை காப்பாற்றிய சம்பவம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்கள்.